• Nov 28 2024

நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை...!கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராய்வு...!

Sharmi / Feb 14th 2024, 4:09 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று(14) மதியம் கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில்,  கரைதுறைப்பற்று பிரதேச சபை பிரதேச செயலாளர் ம.உமாமகள்,  பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், பிரதேச சபையின் செயலாளர், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள்,  கிராம சேவையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை, யானை வேலி அமைத்தல், வீதி வேலைகள் , வீடு, காணி பிரச்சினைகள் அத்தோடு தனியார் பேருந்து வழியனுமதி பத்திரங்களை புதுப்பித்தல், கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்ததுடன் விரிவாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அபிவிருத்தி குழு தலைவரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை.கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராய்வு. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று(14) மதியம் கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.இக் கூட்டத்தில்,  கரைதுறைப்பற்று பிரதேச சபை பிரதேச செயலாளர் ம.உமாமகள்,  பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், பிரதேச சபையின் செயலாளர், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள்,  கிராம சேவையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.குறித்த கலந்துரையாடலில் நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை, யானை வேலி அமைத்தல், வீதி வேலைகள் , வீடு, காணி பிரச்சினைகள் அத்தோடு தனியார் பேருந்து வழியனுமதி பத்திரங்களை புதுப்பித்தல், கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்ததுடன் விரிவாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அபிவிருத்தி குழு தலைவரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement