• Apr 02 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு..!

Sharmi / Apr 1st 2025, 2:45 pm
image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் நாளை (02) வரை தேர்தலை தொடர்ந்து நடத்துவதை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுக்களை பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  

தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக, கொழும்பு மாநகர சபை சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உட்பட பல்வேறு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு  அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால், இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் நாளை (02) வரை தேர்தலை தொடர்ந்து நடத்துவதை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மனுக்களை பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக, கொழும்பு மாநகர சபை சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உட்பட பல்வேறு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு  அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால், இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement