• Oct 19 2024

போதைக்கு அடிமையான பிக்குவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! samugammedia

Chithra / Jun 21st 2023, 11:23 am
image

Advertisement

போதைக்கு அடிமையான பிக்கு ஒருவருக்கு புனர்வாழ்வளிக்குமாறு கோட்டை நீதவான் நீதிபதி திலிண கமகே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிசார் மேற்கொண்ட வாகன சோதனையின் போது முச்சக்கர வண்டியொன்றில் மதுபோதையுடன் பயணித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவரைக் கண்டு அவரை சோதனையிட்டுள்ளனர்.

அதன் போது அவரது கையில் இருந்த திருவோடு போன்ற பாத்திரத்தினுள் 40 மில்லிகிராம் ஹெரோயினும், 200 மில்லி கிராம் கஞ்சாவும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த பௌத்த பிக்கு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, தான் ஒரு நோயாளி என்றும், அபராதத் தொகையொன்றை விதித்து தன்னை விடுதலை செய்யுமாறும் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும் அபராதத்துடன் விடுதலை செய்தால் பௌத்த தர்மத்துக்கு இழுக்கு ஏற்படும் என்று குறிப்பிட்ட நீதவான் திலிண கமகே, குறித்த பௌத்த பிக்குவை பொருத்தமான புனர்வாழ்வு முகாம் ஒன்றில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். 


போதைக்கு அடிமையான பிக்குவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு samugammedia போதைக்கு அடிமையான பிக்கு ஒருவருக்கு புனர்வாழ்வளிக்குமாறு கோட்டை நீதவான் நீதிபதி திலிண கமகே உத்தரவிட்டுள்ளார்.கடந்த 19ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிசார் மேற்கொண்ட வாகன சோதனையின் போது முச்சக்கர வண்டியொன்றில் மதுபோதையுடன் பயணித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவரைக் கண்டு அவரை சோதனையிட்டுள்ளனர்.அதன் போது அவரது கையில் இருந்த திருவோடு போன்ற பாத்திரத்தினுள் 40 மில்லிகிராம் ஹெரோயினும், 200 மில்லி கிராம் கஞ்சாவும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த பௌத்த பிக்கு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, தான் ஒரு நோயாளி என்றும், அபராதத் தொகையொன்றை விதித்து தன்னை விடுதலை செய்யுமாறும் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.எனினும் அபராதத்துடன் விடுதலை செய்தால் பௌத்த தர்மத்துக்கு இழுக்கு ஏற்படும் என்று குறிப்பிட்ட நீதவான் திலிண கமகே, குறித்த பௌத்த பிக்குவை பொருத்தமான புனர்வாழ்வு முகாம் ஒன்றில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement