கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தினை உருவாக்குதல் எனும் தொனிப் பொருளில் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பிரதேச சிவில் அமைப்புகள் இளைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பால்நிலை சமத்துவம் பால்நிலை முரண்பாடுகளை தவிர்த்தல் எனும் செயற்த்திட்டத்தின் கீழ் கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தி அவர்களின் ஊடாக மக்களுக்கு முறையான தெளிவூட்டல் சென்றடைவதற்கான வழிமுறைகளை கையாள்வதற்கு துறை சார்ந்த வளவாளரின் கருத்துரைகள் வழங்கப்பட்டதோடு இதன் ஒரு அங்கமாக வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள பொதுமக்களும் உள்வாங்கப்பட்டதை அடுத்து இந்த செயலமர்வு போரதீவுப்பற்று வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வு இன்று (22) இடம்பெற்றது.
இப்பிரதேசத்தின் குறைபாடுகள் இதன் கட்டமைப்பு மக்கள் மத்தியில் இருக்கின்ற ஆதங்கங்கள் பற்றிய தெளிவூட்டல் பற்றி ஆராயப்பட்டதுடன் அவர்களுடைய குறைபாடுகளும் கேட்டறியப்பட்டது.
இந்நிகழ்வு அகம் மனிதாபிமான வளநிலைய பிரதி இணைப்பாளர் ஏ. மதன் தலைமையில் இடம்பெற்றதுடன் திட்ட இணைப்பாளர் என். இஸ்மியா மற்றும் கள இணைப்பாளர் ப. சிரோஜன் மற்றும் நிறுவனத்தின் உதவிக் கணக்காளர் கு. சஞ்சலிதா மற்றும் வெல்லாவெளி பிரதேச சபையின் செயலாளர் எஸ். பகிரதன் உட்பட இச்செயலமர்வின் வளவாளராக டி. இவாஞ்சலி கலந்துகொண்டார்கள்.
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தினை உருவாக்குதல் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தினை உருவாக்குதல் எனும் தொனிப் பொருளில் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பிரதேச சிவில் அமைப்புகள் இளைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பால்நிலை சமத்துவம் பால்நிலை முரண்பாடுகளை தவிர்த்தல் எனும் செயற்த்திட்டத்தின் கீழ் கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தி அவர்களின் ஊடாக மக்களுக்கு முறையான தெளிவூட்டல் சென்றடைவதற்கான வழிமுறைகளை கையாள்வதற்கு துறை சார்ந்த வளவாளரின் கருத்துரைகள் வழங்கப்பட்டதோடு இதன் ஒரு அங்கமாக வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள பொதுமக்களும் உள்வாங்கப்பட்டதை அடுத்து இந்த செயலமர்வு போரதீவுப்பற்று வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வு இன்று (22) இடம்பெற்றது.இப்பிரதேசத்தின் குறைபாடுகள் இதன் கட்டமைப்பு மக்கள் மத்தியில் இருக்கின்ற ஆதங்கங்கள் பற்றிய தெளிவூட்டல் பற்றி ஆராயப்பட்டதுடன் அவர்களுடைய குறைபாடுகளும் கேட்டறியப்பட்டது. இந்நிகழ்வு அகம் மனிதாபிமான வளநிலைய பிரதி இணைப்பாளர் ஏ. மதன் தலைமையில் இடம்பெற்றதுடன் திட்ட இணைப்பாளர் என். இஸ்மியா மற்றும் கள இணைப்பாளர் ப. சிரோஜன் மற்றும் நிறுவனத்தின் உதவிக் கணக்காளர் கு. சஞ்சலிதா மற்றும் வெல்லாவெளி பிரதேச சபையின் செயலாளர் எஸ். பகிரதன் உட்பட இச்செயலமர்வின் வளவாளராக டி. இவாஞ்சலி கலந்துகொண்டார்கள்.