• Dec 03 2024

பூமிக்கு இந்த ஆண்டு காத்திருக்கும் நெருக்கடி – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

Tamil nila / Jan 14th 2024, 11:52 am
image

பூமி இவ்வாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பத்தைச் சந்திக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதாவது El Nino வானிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய கடுமையான பாதிப்பைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளை அது கேட்டுக்கொண்டது.

குளிர்தரும் La Nina-வில் இருந்து வெப்பம்தரும் El Nino-வுக்குக் கடந்தாண்டு வானிலை மாறியது பூமி இவ்வாண்டு மேலும் அதிகமான வெப்பநிலையை அடைவதற்கான அறிகுறி என்று ஐக்கிய நாட்டு நிறுவன வானிலை அலுவலகச் செயலாளர் கூறினார்.

கடந்தாண்டு உலகம் இதுவரை இல்லாத அளவு கடும்வெப்பத்தைக் கண்டது. இவ்வாண்டு அதைவிட அதிக வெப்பம் பதிவாகும் சாத்தியம் இருப்பதாக அமெரிக்க வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பூமி அதன் வரலாற்றில் கண்ட அதிக வெப்பமான 5 ஆண்டுகளில் ஒன்றாக இவ்வாண்டு அமைவது உறுதி என தெரிவிக்கப்படுகின்றது.

பூமிக்கு இந்த ஆண்டு காத்திருக்கும் நெருக்கடி – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. பூமி இவ்வாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பத்தைச் சந்திக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.அதாவது El Nino வானிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய கடுமையான பாதிப்பைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளை அது கேட்டுக்கொண்டது.குளிர்தரும் La Nina-வில் இருந்து வெப்பம்தரும் El Nino-வுக்குக் கடந்தாண்டு வானிலை மாறியது பூமி இவ்வாண்டு மேலும் அதிகமான வெப்பநிலையை அடைவதற்கான அறிகுறி என்று ஐக்கிய நாட்டு நிறுவன வானிலை அலுவலகச் செயலாளர் கூறினார்.கடந்தாண்டு உலகம் இதுவரை இல்லாத அளவு கடும்வெப்பத்தைக் கண்டது. இவ்வாண்டு அதைவிட அதிக வெப்பம் பதிவாகும் சாத்தியம் இருப்பதாக அமெரிக்க வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் பூமி அதன் வரலாற்றில் கண்ட அதிக வெப்பமான 5 ஆண்டுகளில் ஒன்றாக இவ்வாண்டு அமைவது உறுதி என தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement