• Nov 28 2024

நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடி! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Mar 13th 2024, 9:50 am
image

 

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்சாரம் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு  இலங்கை மின்சார சபை மற்றும் நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபை என்பன கோரிக்கை  விடுத்துள்ளன.

மேலும் இரண்டு மாதங்களுக்கு இந்த வறட்சி நிலைமை நீடித்தால் சுழற்சி முறையில் நீர் விநியோகம் செய்ய நேரிடும் என நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்பொழுது அதிக வெப்பநிலையுடனான வானிலை நிலவி வருவதனால் மக்கள் அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்த நேரிட்டுள்ளது.

மின்சாரத்திற்கான கேள்வியும் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனினும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் நெருக்கடி நிலைகளை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது. 

நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடி விடுக்கப்பட்ட எச்சரிக்கை  நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் மின்சாரம் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு  இலங்கை மின்சார சபை மற்றும் நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபை என்பன கோரிக்கை  விடுத்துள்ளன.மேலும் இரண்டு மாதங்களுக்கு இந்த வறட்சி நிலைமை நீடித்தால் சுழற்சி முறையில் நீர் விநியோகம் செய்ய நேரிடும் என நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.நாட்டில் தற்பொழுது அதிக வெப்பநிலையுடனான வானிலை நிலவி வருவதனால் மக்கள் அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்த நேரிட்டுள்ளது.மின்சாரத்திற்கான கேள்வியும் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.எனினும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் நெருக்கடி நிலைகளை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement