ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை முதலை ஒன்று இழுத்துச் செல்லும் பயங்கர காட்சி பதற வைத்துள்ளது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள காரஸ்ரோட்டா ஆற்றில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜஜ்பூர் மாவட்டத்தில் பஞ்சர்பூரின் கண்டியா கிராமத்தைச் சேர்ந்த சௌதாமினி என்ற 57 வயது பெண் அப்பகுதியில் உள்ள காரஸ்ரோட்டா ஆற்றில் மாலை வேளையில் குளித்துக்கொண்டிருந்தார்.
சுமார் 4 மணியளவில் முதலை ஒன்று பெண்ணை நோக்கி வந்தது. அவ்வேளையிலே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது.
பெண்ணை முதலை இழுத்துச் செல்வதை அவதானித்த ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் முதலையைத் துரத்தி விரட்ட முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் தேடுதல் பணிகளை மேற்கொண்டனர்.
எனினும் குறித்த ஆற்றில் முதலைகள் பல இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை முதலை இழுத்துச் செல்லும் காட்சி காணொளியாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை; தேடுதல் பணிகள் தீவிரம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை முதலை ஒன்று இழுத்துச் செல்லும் பயங்கர காட்சி பதற வைத்துள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள காரஸ்ரோட்டா ஆற்றில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஜஜ்பூர் மாவட்டத்தில் பஞ்சர்பூரின் கண்டியா கிராமத்தைச் சேர்ந்த சௌதாமினி என்ற 57 வயது பெண் அப்பகுதியில் உள்ள காரஸ்ரோட்டா ஆற்றில் மாலை வேளையில் குளித்துக்கொண்டிருந்தார். சுமார் 4 மணியளவில் முதலை ஒன்று பெண்ணை நோக்கி வந்தது. அவ்வேளையிலே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது. பெண்ணை முதலை இழுத்துச் செல்வதை அவதானித்த ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் முதலையைத் துரத்தி விரட்ட முயன்றும் முடியவில்லை.தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் தேடுதல் பணிகளை மேற்கொண்டனர். எனினும் குறித்த ஆற்றில் முதலைகள் பல இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.குறித்த பெண்ணை முதலை இழுத்துச் செல்லும் காட்சி காணொளியாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.