சென்னை அடையாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வந்த நிலையில், அவற்றுக்கு H5N1 (பறவைக் காய்ச்சல்) வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய H5N1 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், காகங்கள் இறந்து கிடக்கும் பகுதிகளில் உடனடியாக முழுமையான அளவில் கிருமிநாசினிகளைத் தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்து கிடக்கும் பறவைகளை எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் வெறும் கையால் தொட வேண்டாம் என கால்நடை பராமரிப்புத் துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொத்தாக மரணித்த காகங்கள்;கொடிய வைரஸ் பாதிப்பு சென்னை அடையாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வந்த நிலையில், அவற்றுக்கு H5N1 (பறவைக் காய்ச்சல்) வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய H5N1 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில், காகங்கள் இறந்து கிடக்கும் பகுதிகளில் உடனடியாக முழுமையான அளவில் கிருமிநாசினிகளைத் தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், உயிரிழந்து கிடக்கும் பறவைகளை எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் வெறும் கையால் தொட வேண்டாம் என கால்நடை பராமரிப்புத் துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.