• Nov 19 2024

இலங்கை வணிகப் பேரவைக்கும் அநுரகுமாரவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

Chithra / Aug 2nd 2024, 3:49 pm
image

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி பிரதான அலுவலகத்தில் நேற்று (01) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் தொகுக்கப்பட்ட 'விஷன் 2030 - ஐந்தாண்டு பொருளாதாரத் திட்டம்' பிரசுரத்தின் பிரதி ஒன்று இதன்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் துணைத் தலைவர் கிரிஷான் பாலேந்திரா, பிரதி உப தலைவர் பிகுமல் தேவரதந்திரி மற்றும் பணிப்பாளர் சபையின் பிரதிநிதிகளான அமல் கப்ரால், சரத் கனேகொட, சுபுன் வீரசிங்க, வினோத் ஹைத்ரமணி மற்றும்  பேராசிரியர் அனில் ஜயந்த,  ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் கலந்துகொண்டனர். 

இலங்கை வணிகப் பேரவைக்கும் அநுரகுமாரவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.மக்கள் விடுதலை முன்னணி பிரதான அலுவலகத்தில் நேற்று (01) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் தொகுக்கப்பட்ட 'விஷன் 2030 - ஐந்தாண்டு பொருளாதாரத் திட்டம்' பிரசுரத்தின் பிரதி ஒன்று இதன்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் துணைத் தலைவர் கிரிஷான் பாலேந்திரா, பிரதி உப தலைவர் பிகுமல் தேவரதந்திரி மற்றும் பணிப்பாளர் சபையின் பிரதிநிதிகளான அமல் கப்ரால், சரத் கனேகொட, சுபுன் வீரசிங்க, வினோத் ஹைத்ரமணி மற்றும்  பேராசிரியர் அனில் ஜயந்த,  ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் கலந்துகொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement