இலங்கையில் இணைய மோசடிச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிறிப்டொ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியிலாளர் சாருக தமுனுகொல தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் 1609 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 110 சம்பவங்களும்,
பெப்ரவரி மாதம் 213 சம்பவங்களும், மார்ச் மாதம் இதுவரையில் 100 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல், நிதி மோசடி, சமூக ஊடகங்களின் ஊடான மோசடிகள், போலி கணக்குகளை உருவாக்குதல், அனுமதியின்றி கணக்குகளுக்குள் பிரவேசித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் அதிகரிக்கும் இணைய மோசடி சம்பவங்கள். இலங்கையில் இணைய மோசடிச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிறிப்டொ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியிலாளர் சாருக தமுனுகொல தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டில் 1609 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 110 சம்பவங்களும், பெப்ரவரி மாதம் 213 சம்பவங்களும், மார்ச் மாதம் இதுவரையில் 100 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல், நிதி மோசடி, சமூக ஊடகங்களின் ஊடான மோசடிகள், போலி கணக்குகளை உருவாக்குதல், அனுமதியின்றி கணக்குகளுக்குள் பிரவேசித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.