திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், ஜெபல் நகர் பகுதியில் வெண் பூச்சித் தாக்கம் காரணமாக 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மூதூர் ஜெபல் நகர் பகுதியில் சுமார் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் தென்னைப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுவரும் விவசாயி ஒருவரின் தோட்டத்திலேயே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய கடுமையான வெப்பமான காலநிலையைத் தொடர்ந்து தென்னை மரங்களில் வெண் பூச்சித் தாக்கம் ஏற்பட்டதாகப் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்துள்ளார்.
பூச்சித் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்த போதிலும், இதுவரை பாதிப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, மூதூர் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் குறித்த விவசாயிக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன், மானிய அடிப்படையில் உரங்களையும் வழங்கியுள்ளனர்.
எனினும், அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை முழுமையாக மீட்டெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக விவசாயி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தனது தென்னந்தோட்டத்திலிருந்து மாதந்தோறும் கணிசமான அளவு தேங்காய்களை அறுவடை செய்து வந்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள வெண் பூச்சித் தாக்கத்தால் தேங்காய் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்காலத்தில் தனது வருமானம் மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் விவசாயி கவலை வெளியிட்டுள்ளார்.
எனவே, 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைப் பாதுகாப்பதுடன், வெண் பூச்சித் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய தொழில்நுட்ப உதவிகளையும் தேவையான நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
500க்கும் மேற்பட்ட தென்னை மரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு – வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் விவசாயி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், ஜெபல் நகர் பகுதியில் வெண் பூச்சித் தாக்கம் காரணமாக 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.மூதூர் ஜெபல் நகர் பகுதியில் சுமார் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் தென்னைப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுவரும் விவசாயி ஒருவரின் தோட்டத்திலேயே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய கடுமையான வெப்பமான காலநிலையைத் தொடர்ந்து தென்னை மரங்களில் வெண் பூச்சித் தாக்கம் ஏற்பட்டதாகப் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்துள்ளார்.பூச்சித் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்த போதிலும், இதுவரை பாதிப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.இதேவேளை, மூதூர் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் குறித்த விவசாயிக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன், மானிய அடிப்படையில் உரங்களையும் வழங்கியுள்ளனர்.எனினும், அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை முழுமையாக மீட்டெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக விவசாயி குறிப்பிட்டுள்ளார்.கடந்த காலங்களில் தனது தென்னந்தோட்டத்திலிருந்து மாதந்தோறும் கணிசமான அளவு தேங்காய்களை அறுவடை செய்து வந்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள வெண் பூச்சித் தாக்கத்தால் தேங்காய் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனால் எதிர்காலத்தில் தனது வருமானம் மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் விவசாயி கவலை வெளியிட்டுள்ளார்.எனவே, 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைப் பாதுகாப்பதுடன், வெண் பூச்சித் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய தொழில்நுட்ப உதவிகளையும் தேவையான நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.