நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முகமாக ஹட்டனில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் இராணுவ அதிகாரிகள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் மற்றும் அமைப்புக்கள் நாட்டின் முப்படைகள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தவும், நாட்டிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கவும் வேண்டும்.
அதேவேளை, அனைத்து இனங்களின் கலாசாரத்துடன் செயற்படக்கூடிய ஒரே அரசியல் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனவும் நுவரெலியா மாவட்ட மரக்கறி விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஆபத்து- நாமல் எச்சரிக்கை. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முகமாக ஹட்டனில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நாட்டின் இராணுவ அதிகாரிகள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் மற்றும் அமைப்புக்கள் நாட்டின் முப்படைகள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தவும், நாட்டிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கவும் வேண்டும்.அதேவேளை, அனைத்து இனங்களின் கலாசாரத்துடன் செயற்படக்கூடிய ஒரே அரசியல் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனவும் நுவரெலியா மாவட்ட மரக்கறி விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.