• Nov 24 2024

எந்த நேரத்திலும் பாரிய மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்..! - மக்களுக்கு வெளியான கடும் எச்சரிக்கை

Chithra / May 2nd 2024, 10:56 am
image

 

பதுளை – எல்ல – கரந்தகொல்ல பகுதியில் எந்தவொரு நேரத்திலும் பாரிய மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, எல்ல - கரந்தகொல்ல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் உமாஓயா பல்நோக்கு திட்டத்தின் விளைவா? இல்லையா என்பதை கண்டறிவதற்காக தொழில்நுட்ப உபகரணங்களை நிறுவ தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சிரேஷ்ட புவியியலாளர்கள் குழுவொன்று, எல்ல கரந்தகொல்ல மற்றும் மலித்தகொல்ல பகுதிகளை நேற்றைய தினம் ஆய்வு செய்ததது.

இதேவேளை, உமாஓயா பல்நோக்கு திட்டத்தினால் இந்த மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதன்படி கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிறப்புக் குழுவினால் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அதன் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன கருத்துரைக்கையில், குறித்த மண்சரிவு அபாயம் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

இந்த பகுதிகளில் பொருத்தப்படும் தொழில்நுட்ப கருவிகளின் அடிப்படையில் விஞ்ஞானப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியும் என குறிப்பிட்டார்.

எந்த நேரத்திலும் பாரிய மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம். - மக்களுக்கு வெளியான கடும் எச்சரிக்கை  பதுளை – எல்ல – கரந்தகொல்ல பகுதியில் எந்தவொரு நேரத்திலும் பாரிய மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரித்துள்ளது.இதேவேளை, எல்ல - கரந்தகொல்ல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் உமாஓயா பல்நோக்கு திட்டத்தின் விளைவா இல்லையா என்பதை கண்டறிவதற்காக தொழில்நுட்ப உபகரணங்களை நிறுவ தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் நடவடிக்கை எடுத்துள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சிரேஷ்ட புவியியலாளர்கள் குழுவொன்று, எல்ல கரந்தகொல்ல மற்றும் மலித்தகொல்ல பகுதிகளை நேற்றைய தினம் ஆய்வு செய்ததது.இதேவேளை, உமாஓயா பல்நோக்கு திட்டத்தினால் இந்த மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.அதன்படி கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிறப்புக் குழுவினால் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அதன் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன கருத்துரைக்கையில், குறித்த மண்சரிவு அபாயம் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.இந்த பகுதிகளில் பொருத்தப்படும் தொழில்நுட்ப கருவிகளின் அடிப்படையில் விஞ்ஞானப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியும் என குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement