கனமழை காரணமாக, மகாவலி கங்கை பெருக்கக்கூடிய ஆபத்து இருப்பதால்,
மகாவலி கங்கை சங்கமிக்கின்ற கொட்டியார குடாவை அண்டிய பகுதியில் வாழுகின்ற மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென,
கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
உப்பாறு, பூவரசன்தீவு மற்றும் சமவாஜதீவு ஆகிய 3 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்களே அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ,
உயர்தர பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தங்களை முகாமை செய்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கிண்ணியா பிரதேச அவசர அனர்த்த
முகாமைத்துவ குழு கூட்டம் இன்று(26) நடைபெற்றது.
இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள், பொலீசார், முப்படையினர், சுகாதாரத் துறையினர், ஜம்மியத்தில் உலமா சபையினர் மற்றும் வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மகாவலி கங்கை பெருக்கெடுக்க கூடிய ஆபத்து கனமழை காரணமாக, மகாவலி கங்கை பெருக்கக்கூடிய ஆபத்து இருப்பதால், மகாவலி கங்கை சங்கமிக்கின்ற கொட்டியார குடாவை அண்டிய பகுதியில் வாழுகின்ற மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென, கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.உப்பாறு, பூவரசன்தீவு மற்றும் சமவாஜதீவு ஆகிய 3 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்களே அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ,உயர்தர பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்தார். வெள்ள அனர்த்தங்களை முகாமை செய்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கிண்ணியா பிரதேச அவசர அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று(26) நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில், கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள், பொலீசார், முப்படையினர், சுகாதாரத் துறையினர், ஜம்மியத்தில் உலமா சபையினர் மற்றும் வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.