• Nov 19 2024

ஒலிம்பிக் சுடரை ஏந்தி சென்ற ஈழத் தமிழன் தர்ஷன்- உலக தமிழர்கள் மகிழ்ச்சி..!

Sharmi / Jul 16th 2024, 2:35 pm
image

ஒலிம்பிக் 2024 விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் சுடரினை பிரான்ஸில் புலம்பெயர் ஈழத் தமிழரான  தர்ஷன் செல்வராஜா ஏந்திச் சென்றார்.

எதிர்வரும் 26 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு முன்னதாக 400 க்கும் மேற்பட்ட பிரான்ஸ் நகரங்கள் மற்றும் பிரதேசங்கள் வழியாக ஒலிம்பிக் சுடர் பயணிக்கவுள்ளது. 

இந்த ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 10,000 பேரில் ஒருவராக புலம்பெயர் ஈழத் தமிழருமான தர்ஷன் செல்வராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று இந்த சுடரினை ஏந்திச்சென்றமை தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேநேரம் 26ஆம் திகதி பிரான்ஸ்சில் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டியின் போதும் ஒலிம்பிக் சுடரினை ஏந்திச் செல்லும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.

இதேவேளை, ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது தனது அதிர்ஷ்டம் என தர்ஷன் செல்வராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னைத் தேர்ந்தெடுத்த பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி ஒளடியா கெஸ்டீரா உட்பட தெரிவுக் குழுவினருக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் தர்ஷன் செல்வராஜா கூறியுள்ளார்.

ஒலிம்பிக் தாயகமான கிரீசில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக்  சுடர் பல நாடுகளுக்கு பயணித்து இறுதியாக இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நாடான பிரான்ஸை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தர்ஷன் செல்வராஜாவுக்கு ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளமை அனைத்து தமிழர்களுக்கும் பெருமை சேரும் விதமாக அமைந்துள்ளது.


ஒலிம்பிக் சுடரை ஏந்தி சென்ற ஈழத் தமிழன் தர்ஷன்- உலக தமிழர்கள் மகிழ்ச்சி. ஒலிம்பிக் 2024 விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் சுடரினை பிரான்ஸில் புலம்பெயர் ஈழத் தமிழரான  தர்ஷன் செல்வராஜா ஏந்திச் சென்றார்.எதிர்வரும் 26 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு முன்னதாக 400 க்கும் மேற்பட்ட பிரான்ஸ் நகரங்கள் மற்றும் பிரதேசங்கள் வழியாக ஒலிம்பிக் சுடர் பயணிக்கவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 10,000 பேரில் ஒருவராக புலம்பெயர் ஈழத் தமிழருமான தர்ஷன் செல்வராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று இந்த சுடரினை ஏந்திச்சென்றமை தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.அதேநேரம் 26ஆம் திகதி பிரான்ஸ்சில் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டியின் போதும் ஒலிம்பிக் சுடரினை ஏந்திச் செல்லும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.இதேவேளை, ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது தனது அதிர்ஷ்டம் என தர்ஷன் செல்வராஜா தெரிவித்துள்ளார்.மேலும் தன்னைத் தேர்ந்தெடுத்த பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி ஒளடியா கெஸ்டீரா உட்பட தெரிவுக் குழுவினருக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் தர்ஷன் செல்வராஜா கூறியுள்ளார்.ஒலிம்பிக் தாயகமான கிரீசில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக்  சுடர் பல நாடுகளுக்கு பயணித்து இறுதியாக இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நாடான பிரான்ஸை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தர்ஷன் செல்வராஜாவுக்கு ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளமை அனைத்து தமிழர்களுக்கும் பெருமை சேரும் விதமாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement