• Sep 17 2024

காசா இடிபாடுகளை அகற்ற 15 ஆண்டுகள் ஆகலாம்: ஐ.நா அறிக்கை...!

Sharmi / Jul 16th 2024, 2:08 pm
image

Advertisement

ஐ. நா அறிக்கையின்படி,  காஸாவில் இஸ்ரேல் நடத்தும்  தாக்குதல்கள் காரணமாக தரைமட்டம் ஆக்கப்பட்ட கட்டிட இடிபாடுகளை அகற்ற 15 ஆண்டுகள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , வெடிக்காத வெடி பொருட்கள், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்கள் என  காஸா இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமை (UNRWA) மதிப்பிட்டுள்ளது, 

மேலும் பாலஸ்தீன அகதிகள் மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்களால் காசா பகுதியில்  40 மில்லியன் டன் இடிபாடுகள் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

"காசா பகுதி வெடிக்காத வெடிகுண்டுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டிருப்பதால் , மக்கள் ஆபத்தான  நிலையில் இருப்பதாக  UNRWA கூறியுள்ளது.

அத்தோடு,  இந்த இடிபாடுகளை அகற்ற 100 க்கும் மேற்பட்ட  கனரக வாகனங்கள் தேவைப்படும் மற்றும் $500 மில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடிபாடுகளால் சுகாதார பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய போர் விமானங்களால் காசா மீது சுமார் 50,000 குண்டுகள் வீசப்பட்டதாகவும், 2,000 முதல் 3,000 குண்டுகள் வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


காசா இடிபாடுகளை அகற்ற 15 ஆண்டுகள் ஆகலாம்: ஐ.நா அறிக்கை. ஐ. நா அறிக்கையின்படி,  காஸாவில் இஸ்ரேல் நடத்தும்  தாக்குதல்கள் காரணமாக தரைமட்டம் ஆக்கப்பட்ட கட்டிட இடிபாடுகளை அகற்ற 15 ஆண்டுகள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் , வெடிக்காத வெடி பொருட்கள், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்கள் என  காஸா இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமை (UNRWA) மதிப்பிட்டுள்ளது, மேலும் பாலஸ்தீன அகதிகள் மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்களால் காசா பகுதியில்  40 மில்லியன் டன் இடிபாடுகள் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறப்படுகின்றது."காசா பகுதி வெடிக்காத வெடிகுண்டுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டிருப்பதால் , மக்கள் ஆபத்தான  நிலையில் இருப்பதாக  UNRWA கூறியுள்ளது.அத்தோடு,  இந்த இடிபாடுகளை அகற்ற 100 க்கும் மேற்பட்ட  கனரக வாகனங்கள் தேவைப்படும் மற்றும் $500 மில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இடிபாடுகளால் சுகாதார பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய போர் விமானங்களால் காசா மீது சுமார் 50,000 குண்டுகள் வீசப்பட்டதாகவும், 2,000 முதல் 3,000 குண்டுகள் வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement