• Nov 26 2024

புத்தளத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமைகள்...!

Tamil nila / Jul 3rd 2024, 8:32 pm
image

புத்தளம் மாவட்டத்தில் ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் இன்று  காலை உடப்புக்கும் - பெரியபாட்டுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடை கொண்டதாகும் என மீனவர்கள் குறிப்பிட்டனர்.

குறித்த கடலாமைகள் இரண்டும் ஒலிவ் வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.

இதே போன்று கடந்த வாரமும் உடப்பு முகத்துவாரம் பகுதியிலும் பெரிய கடலாமையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கி இருந்தது.

கடலாமைகள் கரையொதுங்கியுள்ளமை தொடர்பாக வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்ததையடுத்து புத்தளம் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையிலான கடலாமைகள், டொல்பின்கள் மற்றும் திமிங்களங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


புத்தளத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமைகள். புத்தளம் மாவட்டத்தில் ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.அந்த வகையில் இன்று  காலை உடப்புக்கும் - பெரியபாட்டுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடை கொண்டதாகும் என மீனவர்கள் குறிப்பிட்டனர்.குறித்த கடலாமைகள் இரண்டும் ஒலிவ் வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.இதே போன்று கடந்த வாரமும் உடப்பு முகத்துவாரம் பகுதியிலும் பெரிய கடலாமையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கி இருந்தது.கடலாமைகள் கரையொதுங்கியுள்ளமை தொடர்பாக வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்ததையடுத்து புத்தளம் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையிலான கடலாமைகள், டொல்பின்கள் மற்றும் திமிங்களங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement