நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தில் நிறைவேற்றுப் பதவிகளை வகித்த அதிகாரிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீளக் கையளிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த தரப்பினருக்குத் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான தோட்டாக்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த காலங்களில் துப்பாக்கிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல் பொலிஸாரிடம் உள்ளதாகவும், குறித்த தகவல்களுக்கு அமைய மீண்டும் துப்பாக்கிகளைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு காலக்கெடு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தில் நிறைவேற்றுப் பதவிகளை வகித்த அதிகாரிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீளக் கையளிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தரப்பினருக்குத் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான தோட்டாக்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த காலங்களில் துப்பாக்கிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல் பொலிஸாரிடம் உள்ளதாகவும், குறித்த தகவல்களுக்கு அமைய மீண்டும் துப்பாக்கிகளைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.