• May 22 2026

30 ஆம் திகதிவரை காலக்கெடு -வருமான வரி தொடர்பில் வெளியான விசேட அறிவித்தல்

Tax
Chithra / Nov 6th 2025, 8:03 am
image

 

வருமான வரிக்கு பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும் தங்கள் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை 2025 நவம்பர் மாதம் 30ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ இணையவழியில் (Online) சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இறைவரித் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. 

குறிப்பிட்ட திகதிக்குள் வருமான வரி அறிக்கையினை சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக, 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க இறைவரி சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலதிக விவரங்களை 1944 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ, http://www.ird.gov.lk என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது உங்கள் அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ள முடியும்.

30 ஆம் திகதிவரை காலக்கெடு -வருமான வரி தொடர்பில் வெளியான விசேட அறிவித்தல்  வருமான வரிக்கு பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும் தங்கள் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை 2025 நவம்பர் மாதம் 30ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ இணையவழியில் (Online) சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறைவரித் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட திகதிக்குள் வருமான வரி அறிக்கையினை சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக, 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க இறைவரி சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக விவரங்களை 1944 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ, http://www.ird.gov.lk என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது உங்கள் அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ள முடியும்.

Advertisement

Advertisement

Advertisement