• Aug 21 2025

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

Chithra / Aug 21st 2025, 3:57 pm
image

 

வாக்குவாதம் காரணமாக கூரிய ஆயுதத்தால் ஒருவரை குத்திக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 43 வயது முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் இந்த தீர்ப்பை வழங்கினார்.

2010 மார்ச் 2, அன்று களனியில் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை  வாக்குவாதம் காரணமாக கூரிய ஆயுதத்தால் ஒருவரை குத்திக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 43 வயது முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் இந்த தீர்ப்பை வழங்கினார்.2010 மார்ச் 2, அன்று களனியில் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.நீண்ட விசாரணைக்குப் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement