• Apr 23 2026

ஈரான் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

shanu / Jan 5th 2026, 9:54 am
image

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.


பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை இராஜினாமா செய்தார்.


அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும்.


ஒரு வாரத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 10 பேர் பலியானதாக தகவல் வெளியானது.


இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிலர் இறந்ததை அடுத்து, போராட்டத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாகாணங்களில் பரவிய போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஈரான் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை இராஜினாமா செய்தார்.அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும்.ஒரு வாரத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 10 பேர் பலியானதாக தகவல் வெளியானது.இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிலர் இறந்ததை அடுத்து, போராட்டத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாகாணங்களில் பரவிய போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement