• Apr 17 2026

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் பிரதமருக்கு எதிரான தவறான பிரச்சாரங்கள் - அமைச்சர் விஜித்த கண்டனம்

Chithra / Jan 5th 2026, 9:58 am
image

 

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் குறுகிய அரசியல் நோக்கமுடையவர்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து பிரதமர் மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள் என  அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.


இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரதமரை பதவி விலகுமாறு அரசாங்கத்தில் எவரும் குறிப்பிடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


6ஆம் தர பாடப்புத்தகத்தில் தவறான விடயமொன்று உள்ளடக்கப்பட்டுள்ளமை பாரதூரமான பிழையாகும். தரவு தொகுதி அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எந்நோக்கத்துக்காக இவ்வாறான சர்ச்சைக்குரிய விடயத்தை உள்ளடக்கினார்கள் என்பது தொடர்பில் உரிய தரப்பின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்தார்.


அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


புதிய கல்வி கொள்கைத் திட்டம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் கலாசாரம், பாரம்பரிய கோட்பாடுகளுக்கு அமைவாகவே புதிய கல்வி கொள்கை அமுல்படுத்தப்படும். பாடத்திட்ட தயாரிப்பின் போது காணப்பட்ட குறைப்பாடுகளை ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டினார்கள்.அதற்கமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதற்கட்ட மறுசீரமைப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.


இது அரசாங்கத்தின் கூட்டு முயற்சி மற்றும் பொறுப்பாகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாங்கள் எடுக்கும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான நிலைப்பாடு இதுவாகும்.

சிலர் தத்தமது அரசியல் மற்றும் ஏனைய குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பிரதமரை இலக்காகக் கொண்டு முன்வைக்கும் விமர்சனங்களை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். அவ்வாறு எதுவும் இல்லை. இங்கு அரசாங்கத்தின் கூட்டுக் கொள்கையின் அடிப்படையிலான செயற்பாடே காணப்படுகிறது என்றார்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் பிரதமருக்கு எதிரான தவறான பிரச்சாரங்கள் - அமைச்சர் விஜித்த கண்டனம்  புதிய கல்விக் கொள்கை தொடர்பில் குறுகிய அரசியல் நோக்கமுடையவர்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து பிரதமர் மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள் என  அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரதமரை பதவி விலகுமாறு அரசாங்கத்தில் எவரும் குறிப்பிடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.6ஆம் தர பாடப்புத்தகத்தில் தவறான விடயமொன்று உள்ளடக்கப்பட்டுள்ளமை பாரதூரமான பிழையாகும். தரவு தொகுதி அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எந்நோக்கத்துக்காக இவ்வாறான சர்ச்சைக்குரிய விடயத்தை உள்ளடக்கினார்கள் என்பது தொடர்பில் உரிய தரப்பின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்தார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,புதிய கல்வி கொள்கைத் திட்டம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் கலாசாரம், பாரம்பரிய கோட்பாடுகளுக்கு அமைவாகவே புதிய கல்வி கொள்கை அமுல்படுத்தப்படும். பாடத்திட்ட தயாரிப்பின் போது காணப்பட்ட குறைப்பாடுகளை ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டினார்கள்.அதற்கமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதற்கட்ட மறுசீரமைப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.இது அரசாங்கத்தின் கூட்டு முயற்சி மற்றும் பொறுப்பாகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாங்கள் எடுக்கும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான நிலைப்பாடு இதுவாகும்.சிலர் தத்தமது அரசியல் மற்றும் ஏனைய குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பிரதமரை இலக்காகக் கொண்டு முன்வைக்கும் விமர்சனங்களை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். அவ்வாறு எதுவும் இல்லை. இங்கு அரசாங்கத்தின் கூட்டுக் கொள்கையின் அடிப்படையிலான செயற்பாடே காணப்படுகிறது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement