• Nov 28 2024

பொது வேட்பாளர் அரியநேத்திரன் தொடர்பில் ஞாயிறன்று எடுக்கப்படவுள்ள தீர்மானம் - மாவை வெளியிட்ட தகவல்

Chithra / Aug 9th 2024, 1:04 pm
image

 

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தொடர்பில் 11 ஆம்  திகதி முடிவெடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி ஐனாதிபதி தேர்தல் தொடர்பில்  இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ள முன்னர், அக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரான அரியநேத்திரன் பொது  வேட்பாளராக  2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விடயம்  தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மத்திய குழு கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளது. அதன் பின்னரே கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படும். 

இந்நிலையில், கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்னர் கட்சியின் உறுப்பினர் பொது வேட்பாளராக போட்டியிட தீர்மானித்த விடயம் தொடர்பில் அக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும்.

பொது வேட்பாளராக  அரியநேத்திரன் அறிவிக்கப்பட்ட பின்னர் என்னை வந்து சந்தித்து விடயத்தை தெரியப்படுத்தி சென்றுள்ளார் என்றும் தெரிவித்தார்.

பொது வேட்பாளர் அரியநேத்திரன் தொடர்பில் ஞாயிறன்று எடுக்கப்படவுள்ள தீர்மானம் - மாவை வெளியிட்ட தகவல்  ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தொடர்பில் 11 ஆம்  திகதி முடிவெடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.தமிழரசு கட்சி ஐனாதிபதி தேர்தல் தொடர்பில்  இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ள முன்னர், அக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரான அரியநேத்திரன் பொது  வேட்பாளராக  2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விடயம்  தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மத்திய குழு கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளது. அதன் பின்னரே கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படும். இந்நிலையில், கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்னர் கட்சியின் உறுப்பினர் பொது வேட்பாளராக போட்டியிட தீர்மானித்த விடயம் தொடர்பில் அக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும்.பொது வேட்பாளராக  அரியநேத்திரன் அறிவிக்கப்பட்ட பின்னர் என்னை வந்து சந்தித்து விடயத்தை தெரியப்படுத்தி சென்றுள்ளார் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement