• Aug 15 2025

ராஜிதவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தீர்மானம்

Chithra / Aug 15th 2025, 8:22 am
image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கவனம் செலுத்தவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெறப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சேனாரத்ன இருந்த பல இடங்களில் அவரைக் கைதுசெய்ய சமீபத்திய நாட்களில் சோதனை நடத்தப்பட்டாலும், அவரைக் கைதுசெய்ய முடியவில்லை. 

ராஜித சேனாரத்னவைக் கைதுசெய்ய நீதிமன்றத்தால் சமீபத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, தேசபந்து தென்னகோனைக் கைதுசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, 

அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யத் தயாரானபோது அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ராஜிதவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தீர்மானம் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கவனம் செலுத்தவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெறப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சேனாரத்ன இருந்த பல இடங்களில் அவரைக் கைதுசெய்ய சமீபத்திய நாட்களில் சோதனை நடத்தப்பட்டாலும், அவரைக் கைதுசெய்ய முடியவில்லை. ராஜித சேனாரத்னவைக் கைதுசெய்ய நீதிமன்றத்தால் சமீபத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, தேசபந்து தென்னகோனைக் கைதுசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யத் தயாரானபோது அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement