• Feb 13 2025

அரச சேவையில் நிலவும் 7, 456 வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம்

Chithra / Feb 12th 2025, 7:28 am
image


அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அதன்படி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 3000, பாதுகாப்பு அமைச்சில் 09, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சில் 179, 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் 132, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் 161, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் 3,519, 

மேல் மாகாண சபையில் 34, கிழக்கு மாகாண சபையில் 05, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 17 வெற்றிடங்கள் என மொத்தமாக 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 

மேலும் சுயாதீன வழக்கு தொடுனர் அலுவலகம் நிறுவப்படும் போது சட்டமா அதிபர் அல்லது சட்டமா அதிபர் திணைக்களம் ரத்துச் செய்யப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

இதன்போது, ​​நீதி வழங்கும் பணியில் சட்டமா அதிபர் திணைக்களத்தை விட திறம்பட சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த நிறுவனத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். 


அரச சேவையில் நிலவும் 7, 456 வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம் அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.அதன்படி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 3000, பாதுகாப்பு அமைச்சில் 09, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சில் 179, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் 132, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் 161, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் 3,519, மேல் மாகாண சபையில் 34, கிழக்கு மாகாண சபையில் 05, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 17 வெற்றிடங்கள் என மொத்தமாக 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. மேலும் சுயாதீன வழக்கு தொடுனர் அலுவலகம் நிறுவப்படும் போது சட்டமா அதிபர் அல்லது சட்டமா அதிபர் திணைக்களம் ரத்துச் செய்யப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதன்போது, ​​நீதி வழங்கும் பணியில் சட்டமா அதிபர் திணைக்களத்தை விட திறம்பட சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த நிறுவனத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement