வவுனியா - நெளுக்குளம் - நேரியகுளம் பிரதான வீதியிலுள்ள தம்பனை புளியங்குளம் குளக்கரைக்கு அண்மித்த பகுதியில் இன்று காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது
நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டனர்.
சடலத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் சேட் ஒன்றும் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் உயிரிழந்து ஐந்து தொடக்கம் பத்து நாட்கள் வரை இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதால் ஆணா பெண்ணா என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளமையுடன் தடவியல் பொலிஸாரும் விசாரணைகளை தொடர்கின்றனர்.
சடலத்தை அடையாளம் காண்பதற்காக பிரேத பரிசோதனைக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குளக்கரையில் உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு; வவுனியாவில் பரபரப்பு வவுனியா - நெளுக்குளம் - நேரியகுளம் பிரதான வீதியிலுள்ள தம்பனை புளியங்குளம் குளக்கரைக்கு அண்மித்த பகுதியில் இன்று காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதுநெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டனர்.சடலத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் சேட் ஒன்றும் காணப்பட்டுள்ளது.குறித்த நபர் உயிரிழந்து ஐந்து தொடக்கம் பத்து நாட்கள் வரை இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதால் ஆணா பெண்ணா என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளமையுடன் தடவியல் பொலிஸாரும் விசாரணைகளை தொடர்கின்றனர்.சடலத்தை அடையாளம் காண்பதற்காக பிரேத பரிசோதனைக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.