• Dec 14 2024

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு; வடக்கு கிழக்கு மாகாண மக்களே அவதானம்..!

Sharmi / Nov 26th 2024, 6:23 pm
image

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அம்பாறைக்கு கிழக்காக 82 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். 

இது இன்று இரவு அல்லது நாளை காலை புயலாக மாறும். இப்புயலுக்கு பெங்கால் என பெயரிடப்படும். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் கனமழை இன்னமும் அதிகரிக்கும். 

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மந்தமான வேகத்தில் நகர்வதால் இதன் பாதிப்புக்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். 

இன்றும் நாளையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிக மிக கனமழை கிடைக்கும். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தற்போது கிடைக்கும் மிக கன மழை தொடரும்.  

திருகோணமலை , மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி ,மன்னார் மாவட்டத்திற்கும் கனமழை தொடரும். 

நாளை இரவு முதல் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக மழை குறைவடையும். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்வான பகுதிகள், குளங்களின் கீழுள்ள பகுதிகள், ஆற்று வடிநிலங்களுக்கு அண்மித்த பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உண்டு. பல குளங்கள் வான் பாயத்தொடங்கியுள்ளன. கன மழையும் கிடைத்து வருகின்றது. 

ஆகவே வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதனைக் கருத்தில் கொள்ளுங்கள். 

கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் வீசும் வேகமான காற்று தொடரும். சில வேளைகளில் இந்த காற்று மணித்தியாலத்துக்கு 80 கி.மீ. இனை விடவும் வேகமாக வீசக் கூடும். வடக்கு மாகாணத்திற்கு இன்று இரவு முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் மிக மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள உங்கள் படகுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள். 

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே, இந்த புயலின் பாதிப்புக்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்ககூடும். 

ஆகவே எச்சரிக்கைகளை கருத்தில் கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்  எனவும் தெரிவித்தார்.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு; வடக்கு கிழக்கு மாகாண மக்களே அவதானம். தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அம்பாறைக்கு கிழக்காக 82 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது இன்று இரவு அல்லது நாளை காலை புயலாக மாறும். இப்புயலுக்கு பெங்கால் என பெயரிடப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் கனமழை இன்னமும் அதிகரிக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மந்தமான வேகத்தில் நகர்வதால் இதன் பாதிப்புக்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். இன்றும் நாளையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிக மிக கனமழை கிடைக்கும். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தற்போது கிடைக்கும் மிக கன மழை தொடரும்.  திருகோணமலை , மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி ,மன்னார் மாவட்டத்திற்கும் கனமழை தொடரும். நாளை இரவு முதல் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக மழை குறைவடையும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்வான பகுதிகள், குளங்களின் கீழுள்ள பகுதிகள், ஆற்று வடிநிலங்களுக்கு அண்மித்த பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உண்டு. பல குளங்கள் வான் பாயத்தொடங்கியுள்ளன. கன மழையும் கிடைத்து வருகின்றது. ஆகவே வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதனைக் கருத்தில் கொள்ளுங்கள். கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் வீசும் வேகமான காற்று தொடரும். சில வேளைகளில் இந்த காற்று மணித்தியாலத்துக்கு 80 கி.மீ. இனை விடவும் வேகமாக வீசக் கூடும். வடக்கு மாகாணத்திற்கு இன்று இரவு முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் மிக மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள உங்கள் படகுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள். எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே, இந்த புயலின் பாதிப்புக்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்ககூடும். ஆகவே எச்சரிக்கைகளை கருத்தில் கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement