• Dec 14 2024

க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு..!

Sharmi / Nov 26th 2024, 6:11 pm
image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சை, நவம்பர் 27, 28 மற்றும் 29ஆம் திகதிகளில்  நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் 2024 க.பொ.த உயர்தர பரீட்சையில்  நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பாடங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

இன்று (26) மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் , 

நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். 

மேலும், க.பொ.த உயர்தர பரீட்சை 30 ஆம் திகதி சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தார்.

நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள பாடங்களுக்கான பரீட்சை முறையே டிசம்பர் 21, 22, 23 ஆம் திகதிகளில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.   

க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சை, நவம்பர் 27, 28 மற்றும் 29ஆம் திகதிகளில்  நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.தற்போது நடைபெற்றுவரும் 2024 க.பொ.த உயர்தர பரீட்சையில்  நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பாடங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (26) மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் , நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், க.பொ.த உயர்தர பரீட்சை 30 ஆம் திகதி சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தார்.நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள பாடங்களுக்கான பரீட்சை முறையே டிசம்பர் 21, 22, 23 ஆம் திகதிகளில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement