கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பில் ஏற்படும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை சுங்கம் ஒரு விசேட திட்டத்தை தொடங்கியுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்தார்.
நேற்றைய நிலவரப்படி, கொழும்பு துறைமுகத்திலிருந்து 459 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, RCT, கிரேலைன் 1 மற்றும் 2 பிரிவுகளில் இருந்து 242 கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டன.
சுங்கத்துறை நாளொன்றுக்கு சுமார் 500 கொள்கலன்களை சோதனை செய்து விடுவிக்க முடியும் என்றாலும், அனுமதி வழங்கும் முகவர்கள் மற்றும் கொள்கலன் லொறி சாரதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் விடுவிக்கக்கூடிய கொள்கலன்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
இன்று (14) காலை நிலவரப்படி, நுழைவாயில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், 496 கொள்கலன்கள் துறைமுகத்தில் உள்ளன, ஆனால் இன்னும் சரக்கு சோதனை நிறைவடைந்து விடுவிக்கப்படவில்லை.
இன்று விடுமுறை நாளாக இருந்தாலும், சுங்கம் மற்றும் பிற தொடர்புடைய அரச நிறுவனங்கள் கொள்கலன்களை விடுவிக்கும் பணியில் ஈடுபடும் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கொள்கலன் விடுவிப்பில் தாமதம்; ஜனாதிபதியின் உத்தரவால் முடிவுக்கு வந்த பிரச்சினை கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பில் ஏற்படும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை சுங்கம் ஒரு விசேட திட்டத்தை தொடங்கியுள்ளது.ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்தார்.நேற்றைய நிலவரப்படி, கொழும்பு துறைமுகத்திலிருந்து 459 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக, RCT, கிரேலைன் 1 மற்றும் 2 பிரிவுகளில் இருந்து 242 கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டன.சுங்கத்துறை நாளொன்றுக்கு சுமார் 500 கொள்கலன்களை சோதனை செய்து விடுவிக்க முடியும் என்றாலும், அனுமதி வழங்கும் முகவர்கள் மற்றும் கொள்கலன் லொறி சாரதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் விடுவிக்கக்கூடிய கொள்கலன்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.இன்று (14) காலை நிலவரப்படி, நுழைவாயில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், 496 கொள்கலன்கள் துறைமுகத்தில் உள்ளன, ஆனால் இன்னும் சரக்கு சோதனை நிறைவடைந்து விடுவிக்கப்படவில்லை.இன்று விடுமுறை நாளாக இருந்தாலும், சுங்கம் மற்றும் பிற தொடர்புடைய அரச நிறுவனங்கள் கொள்கலன்களை விடுவிக்கும் பணியில் ஈடுபடும் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.