ஜனாதிபதியின் சேவைகளையும் ஊழல் மற்றும் போதைப் பொருள் ஒழிப்புக்கான அவரது வேலைத் திட்டங்களையும் பாராட்டி வரவேற்கிறோம்: அதேநேரம் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை இல்லாமல் செய்ய வேண்டும் என்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் ஜனாதிபதியின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
அவர்களின் கூற்றுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நேற்று (10) இடம்பெற்ற மாதாந்த அமர்வில் பேசும்போது தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை பெற்றுக் கொடுத்த பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் மகாத்மா காந்தியின் வழியில் அஜிம்சையின் ஊடாக சிறந்த சேவையாற்றியதோடு, இலங்கை மக்கள் ஒருதாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்துள்ளார். எனவேதான் அவரது உருவப்படம் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு, பாராளுமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை நிறுவப்பட்டு தேசிய ரீதியில் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
அவரது சேவைகளைத் தெரிந்து கொள்ளாமல் நேற்று அரசியலுக்கு வந்த சிலர், முக்கிய நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டுள்ள அவரது பெயரை இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது ஜனாதிபதியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மலையக மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள காரணமாக அமைந்து விடும் என்பதை மறந்து விடக் கூடாது.
கொட்டகலை பிரதேச சபை வருடந்தோறும் சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவுப் பொதிகளை வழங்கி வருவது போல அடுத்த மாதம் 8 ஆந் திகதி மகளிர் தினத்தன்று 12 இலட்ச ரூபா செலவில் 400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளது.
மத்திய மாகாணத்தின் 300 மில்லியன் ரூபா வேலைத் திட்டத்தில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் சுப்பர் மார்க்கெட் அமைத்து சபைக்கு வருமானத்தை தேடிக்கொள்ளும் பிரேரணை முன்மொழியப்பட்டுள்ளது.
அதேபோல், பிரதேச சபையின் பழைமை வாய்ந்த விடுதிகளை அகற்றி அந்த இடத்திலும் சந்தைக் கட்டத்தை அமைக்க உறுப்பினர்களின் அனுமதியைக் கோரியுள்ளோம். பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகலளுக்கு வரியைப் பெற்றுக் கொள்வதற்காக ஆளுநரின் அனுமதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எமது உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் கோரிக்கைக்கு அமைய, கொட்டகலை நகரில் பொது மக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் மதுபானசாலைகளில் இடம்பெற்று வரும் இடையூறுகள் தொடர்பாக பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி, கலால் திணைக்கள அதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரின் கலந்துரையாடலை எனது தலைமையில் நடத்தி அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சுதந்திர தினத்தை வெறுமனே தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்துவதோடு நின்று விடாமல், பிரதேசத்தின் முக்கியமான பகுதிகளில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டு ஒத்துழைப்பு வழங்கிய சகல உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கக் கோருவது ஜனாதிபதிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாகும் -கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ஜனாதிபதியின் சேவைகளையும் ஊழல் மற்றும் போதைப் பொருள் ஒழிப்புக்கான அவரது வேலைத் திட்டங்களையும் பாராட்டி வரவேற்கிறோம்: அதேநேரம் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை இல்லாமல் செய்ய வேண்டும் என்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் ஜனாதிபதியின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர்களின் கூற்றுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நேற்று (10) இடம்பெற்ற மாதாந்த அமர்வில் பேசும்போது தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை பெற்றுக் கொடுத்த பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் மகாத்மா காந்தியின் வழியில் அஜிம்சையின் ஊடாக சிறந்த சேவையாற்றியதோடு, இலங்கை மக்கள் ஒருதாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்துள்ளார். எனவேதான் அவரது உருவப்படம் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு, பாராளுமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை நிறுவப்பட்டு தேசிய ரீதியில் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.அவரது சேவைகளைத் தெரிந்து கொள்ளாமல் நேற்று அரசியலுக்கு வந்த சிலர், முக்கிய நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டுள்ள அவரது பெயரை இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது ஜனாதிபதியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மலையக மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள காரணமாக அமைந்து விடும் என்பதை மறந்து விடக் கூடாது.கொட்டகலை பிரதேச சபை வருடந்தோறும் சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவுப் பொதிகளை வழங்கி வருவது போல அடுத்த மாதம் 8 ஆந் திகதி மகளிர் தினத்தன்று 12 இலட்ச ரூபா செலவில் 400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாணத்தின் 300 மில்லியன் ரூபா வேலைத் திட்டத்தில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் சுப்பர் மார்க்கெட் அமைத்து சபைக்கு வருமானத்தை தேடிக்கொள்ளும் பிரேரணை முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோல், பிரதேச சபையின் பழைமை வாய்ந்த விடுதிகளை அகற்றி அந்த இடத்திலும் சந்தைக் கட்டத்தை அமைக்க உறுப்பினர்களின் அனுமதியைக் கோரியுள்ளோம். பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகலளுக்கு வரியைப் பெற்றுக் கொள்வதற்காக ஆளுநரின் அனுமதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.எமது உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் கோரிக்கைக்கு அமைய, கொட்டகலை நகரில் பொது மக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் மதுபானசாலைகளில் இடம்பெற்று வரும் இடையூறுகள் தொடர்பாக பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி, கலால் திணைக்கள அதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரின் கலந்துரையாடலை எனது தலைமையில் நடத்தி அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், சுதந்திர தினத்தை வெறுமனே தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்துவதோடு நின்று விடாமல், பிரதேசத்தின் முக்கியமான பகுதிகளில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டு ஒத்துழைப்பு வழங்கிய சகல உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.