• Jan 24 2025

3 வாரங்களில் அதிகரித்த டெங்கு நோயாளர்கள் - இருவர் பலி! 22 அபாய பிரிவுகள் தொடர்பில் எச்சரிக்கை

Chithra / Jan 23rd 2025, 2:07 pm
image

 

இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தாண்டின் முதல் 3 வாரங்களில் 2 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக மேற்படி பிரிவு தெரிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதோடு, அதன் எண்ணிக்கை 1,576 ஆகும்.

கொழும்பு மாவட்டத்தில் 491 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில்   558 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில்   95 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் டெங்கு நோய் பரவக்கூடிய அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகார பிரிவுகள் 22 அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

3 வாரங்களில் அதிகரித்த டெங்கு நோயாளர்கள் - இருவர் பலி 22 அபாய பிரிவுகள் தொடர்பில் எச்சரிக்கை  இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்தாண்டின் முதல் 3 வாரங்களில் 2 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக மேற்படி பிரிவு தெரிவித்துள்ளது.அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதோடு, அதன் எண்ணிக்கை 1,576 ஆகும்.கொழும்பு மாவட்டத்தில் 491 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில்   558 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில்   95 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் டெங்கு நோய் பரவக்கூடிய அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகார பிரிவுகள் 22 அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement