மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் மூத்த சகோதரனை குத்திக்கொலை செய்த சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸார் இன்று முற்பகல் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை நேற்றிலிருந்து பொலிஸார் வலைவிரித்து தேடிவந்த நிலையில் இன்று பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
சாதுலியா வித்தியாலய வீதியைச் சேர்ந்த சீனி முஹம்மது முஸம்மில் எனும் 41 வயதுடையவரே நேற்று இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.
சகோதரனான தம்பி, உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று பணம் தருமாறு கேட்டதாகவும்,
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தபோது இடம்பெற்ற வாக்குவாதத்தினால் கோபம் கொண்ட தம்பி, அண்ணனை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மறைத்து வைத்துள்ள இடத்தை அடையாளங்காட்டியதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மூத்த சகோதரனை குத்திக்கொலை செய்த தம்பி; வலைவீசிப் பிடித்த பொலிஸார் மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் மூத்த சகோதரனை குத்திக்கொலை செய்த சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸார் இன்று முற்பகல் கைது செய்துள்ளனர்.சந்தேகநபரை நேற்றிலிருந்து பொலிஸார் வலைவிரித்து தேடிவந்த நிலையில் இன்று பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.சாதுலியா வித்தியாலய வீதியைச் சேர்ந்த சீனி முஹம்மது முஸம்மில் எனும் 41 வயதுடையவரே நேற்று இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.சகோதரனான தம்பி, உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று பணம் தருமாறு கேட்டதாகவும்,அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தபோது இடம்பெற்ற வாக்குவாதத்தினால் கோபம் கொண்ட தம்பி, அண்ணனை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மறைத்து வைத்துள்ள இடத்தை அடையாளங்காட்டியதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.