• Sep 03 2025

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை

Chithra / Sep 3rd 2025, 12:45 pm
image


முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விடுதலை செய்து நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை  பிறப்பித்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி இயக்குபவரை அச்சுறுத்தியதாகவும் தாக்கியதாகவும் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய காலத்தில் அவர் இவ்வாறு மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றமற்றவர் என அறிவித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விடுதலை செய்து நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை  பிறப்பித்துள்ளது.பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி இயக்குபவரை அச்சுறுத்தியதாகவும் தாக்கியதாகவும் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய காலத்தில் அவர் இவ்வாறு மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றமற்றவர் என அறிவித்து தீர்ப்பளித்துள்ளது.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement