• Sep 03 2025

15 நாட்களாக காணாமல்போன நபர் வீடொன்றில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு

Chithra / Sep 3rd 2025, 2:00 pm
image


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று மதியம் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 15 நாட்களாக காணாமல் போன நிலையில்  சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். 

சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த  55  வயது மதிக்கத்தக்கவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

நிர்மாணிக்கப்பட்டு வரும் ஒன்றின் 2 ஆம்  மாடியில் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக வீட்டின் உரிமையாளர்  பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் 15 நாட்களாக காணாமல்போன நிலையில் உறவினர்கள் தேடி வந்துள்ளனர். 

மனநிலை பாதிக்ககப்பட்ட இவர் சகோதரி ஒருவரின் வீட்டில் தங்கி இருந்த நிலையில் காணாமல் போனதாக பொலிஸாரின்  ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர் .

15 நாட்களாக காணாமல்போன நபர் வீடொன்றில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று மதியம் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 15 நாட்களாக காணாமல் போன நிலையில்  சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த  55  வயது மதிக்கத்தக்கவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நிர்மாணிக்கப்பட்டு வரும் ஒன்றின் 2 ஆம்  மாடியில் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக வீட்டின் உரிமையாளர்  பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 15 நாட்களாக காணாமல்போன நிலையில் உறவினர்கள் தேடி வந்துள்ளனர். மனநிலை பாதிக்ககப்பட்ட இவர் சகோதரி ஒருவரின் வீட்டில் தங்கி இருந்த நிலையில் காணாமல் போனதாக பொலிஸாரின்  ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர் .

Advertisement

Advertisement

Advertisement