செருப்புக்குள் ஒழிந்திருந்து பாம்பு கடித்ததில் நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த மென் பொறியியலாளர் மஞ்சு பிரகாஷ் (வயது -41) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் மதியம், தன் செருப்பை அணிந்து காரில் வெளியே சென்றார். தாய்க்கு கரும்பு ஜூஸ் வாங்கி கொண்டு, வீட்டுக்கு வந்தார்.
ஜூசை தம்பியிடம் கொடுத்து, தாயிடம் கொடுக்கும் படி கூறிவிட்டு தன் அறைக்கு சென்று படுத்தார்.
சிறிது நேரத்துக்கு பின் கூலி தொழிலாளி ஒருவர் ஏதோ கேட்பதற்காக, மஞ்சு பிரகாஷின் வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த செருப்பில் குட்டி பாம்பு இறந்து கிடப்பதை அவதானித்து வீட்டாரிடம் தெரிவித்தார்.
பாம்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மஞ்சு பிரகாஷின் தாய், மகனின் அறைக்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது அவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்தார்.
உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மஞ்சு பிரகாஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
செருப்புக்குள் ஒழிந்திருக்கும் அளவிற்கு ஒரு சிறிய பாம்பு கடித்து குறித்த நபர் உயிரிழந்தமை அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செருப்புக்குள் ஒழிந்து இருந்த குட்டிப்பாம்பு; வாயில் நுரை தள்ளிய படி நபரொருவர் உயிரிழப்பு செருப்புக்குள் ஒழிந்திருந்து பாம்பு கடித்ததில் நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த மென் பொறியியலாளர் மஞ்சு பிரகாஷ் (வயது -41) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த நபர் நேற்று முன்தினம் மதியம், தன் செருப்பை அணிந்து காரில் வெளியே சென்றார். தாய்க்கு கரும்பு ஜூஸ் வாங்கி கொண்டு, வீட்டுக்கு வந்தார். ஜூசை தம்பியிடம் கொடுத்து, தாயிடம் கொடுக்கும் படி கூறிவிட்டு தன் அறைக்கு சென்று படுத்தார். சிறிது நேரத்துக்கு பின் கூலி தொழிலாளி ஒருவர் ஏதோ கேட்பதற்காக, மஞ்சு பிரகாஷின் வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த செருப்பில் குட்டி பாம்பு இறந்து கிடப்பதை அவதானித்து வீட்டாரிடம் தெரிவித்தார். பாம்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மஞ்சு பிரகாஷின் தாய், மகனின் அறைக்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது அவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மஞ்சு பிரகாஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். செருப்புக்குள் ஒழிந்திருக்கும் அளவிற்கு ஒரு சிறிய பாம்பு கடித்து குறித்த நபர் உயிரிழந்தமை அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.