• Sep 03 2025

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த தகவல்கள்

Chithra / Sep 3rd 2025, 2:39 pm
image

 

நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.  

‘கெஹெல்பத்தர பத்மே’ எனப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபர் இந்தத் தொழிற்சாலையில் 04 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், குறித்த தொழிற்சாலையை இயக்குவதற்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், 

இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அரசியல் தொடர்புகள், பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுடனான தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இந்த விவரங்களை உறுதிப்படுத்த மேலும் ஆழமான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த தகவல்கள்  நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.  ‘கெஹெல்பத்தர பத்மே’ எனப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபர் இந்தத் தொழிற்சாலையில் 04 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், குறித்த தொழிற்சாலையை இயக்குவதற்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அரசியல் தொடர்புகள், பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுடனான தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.இந்த விவரங்களை உறுதிப்படுத்த மேலும் ஆழமான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement