• Sep 03 2025

நீதிமன்ற வளாகத்தில் ஹரக் கட்டாவை கொலை செய்யத் திட்டம்; துப்பாக்கிதாரி கைது

Chithra / Sep 3rd 2025, 12:27 pm
image

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய திட்டமிட்டு, பத்திரிகையாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபர் நேற்று மஹரகமவில் வைத்து மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவால்  கைது செய்யப்பட்டார். 

இந்தக் கொலைத் திட்டம் கெஹெல்பத்தர பத்மேவின் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து எரிந்த நிலையில் ஒரு வீடியோ கெமரா மற்றும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரையும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் ஹரக் கட்டாவை கொலை செய்யத் திட்டம்; துப்பாக்கிதாரி கைது பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய திட்டமிட்டு, பத்திரிகையாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் நேற்று மஹரகமவில் வைத்து மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவால்  கைது செய்யப்பட்டார். இந்தக் கொலைத் திட்டம் கெஹெல்பத்தர பத்மேவின் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபரிடமிருந்து எரிந்த நிலையில் ஒரு வீடியோ கெமரா மற்றும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டன.இந்நிலையில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரையும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement