• Sep 03 2025

159 ஆவது பொலிஸ் தினம் நாடுமுழுவதும் கடைப்பிடிப்பு; ஜனாதிபதி தலைமையில் நிகழ்வுகள் முன்னெடுப்பு!

shanuja / Sep 3rd 2025, 11:29 am
image

நாடுமுழுவதும் இன்று 159 ஆவது பொலிஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 


 “சட்டத்தைப் பாதுகாப்போம், அமைதியைப் போற்றுவோம்” என்ற கருப்பொருளில் இந்த ஆண்டுக்கான பொலிஸ்தினம்  கொண்டாடப்படுகிறது.


அதற்கமைய 159 ஆவது பொலிஸ் நினைவு நாள் நிகழ்வுகள், திம்பிரிகஸ்யாய பொலிஸ் மைதானத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல்  நடைபெறவுள்ளது. 


பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற மூத்த டிஐஜி ரவி செனவிரத்ன, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் பல மூத்த மற்றும் இளைய பொலிஸ் அதிகாரிகள் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

159 ஆவது பொலிஸ் தினம் நாடுமுழுவதும் கடைப்பிடிப்பு; ஜனாதிபதி தலைமையில் நிகழ்வுகள் முன்னெடுப்பு நாடுமுழுவதும் இன்று 159 ஆவது பொலிஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.  “சட்டத்தைப் பாதுகாப்போம், அமைதியைப் போற்றுவோம்” என்ற கருப்பொருளில் இந்த ஆண்டுக்கான பொலிஸ்தினம்  கொண்டாடப்படுகிறது.அதற்கமைய 159 ஆவது பொலிஸ் நினைவு நாள் நிகழ்வுகள், திம்பிரிகஸ்யாய பொலிஸ் மைதானத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல்  நடைபெறவுள்ளது. பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற மூத்த டிஐஜி ரவி செனவிரத்ன, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் பல மூத்த மற்றும் இளைய பொலிஸ் அதிகாரிகள் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement