• Sep 03 2025

இராணுவத்தினரை பழிவாங்கும் அரசு பயங்கரவாதிகளை கொண்டாடும் போது அமைதி காக்கிறது! மொட்டு கட்சி காட்டம்

Chithra / Sep 3rd 2025, 9:28 am
image

 

இராணுவத்தினரை பழிவாங்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. பயங்கரவாதிகளை கோலாகலமாக கொண்டாடும் போது அமைதி காக்கிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவித்ததாவது,

30 வருடகால பயங்கரவாத யுத்தத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யுத்தம் முடிவடைந்தாலும் பயங்கரவாதத்தக்குரிய பிரிவினைவாதம் இன்றும் இல்லாதொழியவில்லை என்பதை புரிந்துக்கொள்வது ஒன்றும் கடினமானதல்ல, 

தாய் நாட்டை பாதுகாப்பதற்காக தனது உயிரையும் அர்ப்பணிப்பதற்கு முன்வந்த இராணுவத்தினர் இன்று பலிவாங்கப்படுவதன் ஊடாக அதனை விளங்கிக்கொள்ளலாம். இது வடக்கின் சாதாரண மக்களின் தேவைக்காகவல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்துக்கொண்டுள்ளோம்.

தற்போதைய ஆட்சியாளர்கள் இராணுவத்தினருக்கு எதிராக வெறுப்பான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள். 

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பல்வேறு தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்பது ஒன்றும் இரகசியமல்ல.

அரசாங்கத்தின் ஊடாக இராணுவத்தினரை பலிவாங்குவது ஒரு தரப்பினரது பிரதான நோக்கமாகும்.இரு தரப்பினருக்கும் இடையிலான தெளிவான புரிந்துணர்வுடன் இராணுவத்தை பலிவாங்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பயங்கரவாதிகளை கோலாகலமாக கொண்டாடும் போது அரசாங்கம் அமைதி காக்கிறது.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தின் அதிகாரிகளுக்கு சர்வதேச மட்டத்தில் தடைகள் விதிக்கப்படும் போது அரசாங்கம் அதற்கு எதிராக செயற்படுவதில்லை. பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.

தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்து, நாட்டுக்காக சேவையாற்றிய இராணுவத்தினருக்காக முன்னிலையாகும் தார்மீக பொறுப்பு வரலாற்றினால் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பொறுப்பை பிற தரப்பினருக்கு கையளிக்க முடியாது.

அரசியல் செயற்பாட்டாளர்களாகவும், பொது மக்களை உள்ளடக்கிய சமூக செயற்பாட்டாளர்களாகவும் நாங்கள் அந்த பொறுப்பை நிறைவேற்றுவோம்.அதற்கு மகாநாயக்க தேரர்களின் ஆசிர்வாதத்தை கோருகிறோம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரை பழிவாங்கும் அரசு பயங்கரவாதிகளை கொண்டாடும் போது அமைதி காக்கிறது மொட்டு கட்சி காட்டம்  இராணுவத்தினரை பழிவாங்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. பயங்கரவாதிகளை கோலாகலமாக கொண்டாடும் போது அமைதி காக்கிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.அக்கடிதத்தில் மேலும் தெரிவித்ததாவது,30 வருடகால பயங்கரவாத யுத்தத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யுத்தம் முடிவடைந்தாலும் பயங்கரவாதத்தக்குரிய பிரிவினைவாதம் இன்றும் இல்லாதொழியவில்லை என்பதை புரிந்துக்கொள்வது ஒன்றும் கடினமானதல்ல, தாய் நாட்டை பாதுகாப்பதற்காக தனது உயிரையும் அர்ப்பணிப்பதற்கு முன்வந்த இராணுவத்தினர் இன்று பலிவாங்கப்படுவதன் ஊடாக அதனை விளங்கிக்கொள்ளலாம். இது வடக்கின் சாதாரண மக்களின் தேவைக்காகவல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்துக்கொண்டுள்ளோம்.தற்போதைய ஆட்சியாளர்கள் இராணுவத்தினருக்கு எதிராக வெறுப்பான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பல்வேறு தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்பது ஒன்றும் இரகசியமல்ல.அரசாங்கத்தின் ஊடாக இராணுவத்தினரை பலிவாங்குவது ஒரு தரப்பினரது பிரதான நோக்கமாகும்.இரு தரப்பினருக்கும் இடையிலான தெளிவான புரிந்துணர்வுடன் இராணுவத்தை பலிவாங்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.பயங்கரவாதிகளை கோலாகலமாக கொண்டாடும் போது அரசாங்கம் அமைதி காக்கிறது.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தின் அதிகாரிகளுக்கு சர்வதேச மட்டத்தில் தடைகள் விதிக்கப்படும் போது அரசாங்கம் அதற்கு எதிராக செயற்படுவதில்லை. பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்து, நாட்டுக்காக சேவையாற்றிய இராணுவத்தினருக்காக முன்னிலையாகும் தார்மீக பொறுப்பு வரலாற்றினால் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பொறுப்பை பிற தரப்பினருக்கு கையளிக்க முடியாது.அரசியல் செயற்பாட்டாளர்களாகவும், பொது மக்களை உள்ளடக்கிய சமூக செயற்பாட்டாளர்களாகவும் நாங்கள் அந்த பொறுப்பை நிறைவேற்றுவோம்.அதற்கு மகாநாயக்க தேரர்களின் ஆசிர்வாதத்தை கோருகிறோம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement