• Sep 02 2025

டெல்லியிலிருந்து இந்தூருக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து; “மே டே” என வானில் இருந்து எச்சரிக்கை விடுத்த விமானி!

shanuja / Sep 2nd 2025, 5:23 pm
image

டெல்லியிலிருந்து இந்தூருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை வானில் இருந்து “மே டே” எனக் கூச்சலிட்டு விமானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

 

அண்மையில் புதுடெல்லியிலிருந்து இந்தூர் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இயந்திரங்களில் ஒன்று தீப்பற்றியது. 


தீப்பற்றியதை அறிந்த பின்னர் விமானம் மீண்டும்  டெல்லிக்கே திரும்பியது. இதனால் டெல்லி விமானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.  


AI 2913 என்ற விமானம் டெல்லியிலிருந்து இந்தூருக்குப் புறப்பட்டபோது, வலது இயந்திரத்தில் தீ விபத்துக்கான எச்சரிக்கையை விமானக் குழுவினர் அவதானித்தனர். 


அதனை அடுத்து வழக்கமான நடைமுறைகளின்படி, விமானிகள் பாதிக்கப்பட்ட இயந்திரத்தை நிறுத்தி விமானத்தை டெல்லிக்குத் திருப்பினர்.


விமானத்தை டெல்லிக்குத் திருப்பும் போதே விமானி வானில் இருந்து மே டே என்று கூச்சலிட்டு தீ விபத்திற்கான எச்சரிக்கையை விடுத்தார். 


அதன்பின்னர் விமானத்தை பாதுகாப்பாக விமானி  தரையிறக்கினார் என்று ஏர் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


அந்த அறிக்கையில், பயணிகள் இந்தூருக்குச் செல்லும் மற்றொரு சேவைக்கு மாற்றப்பட்டனர் என்றும் நடந்த அசெளகரியத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்தது. 


அத்துடன் விமானப் பயணிகள், பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு முதன்மை தருவதாகவும் ஏர் இநதியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லியிலிருந்து இந்தூருக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து; “மே டே” என வானில் இருந்து எச்சரிக்கை விடுத்த விமானி டெல்லியிலிருந்து இந்தூருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை வானில் இருந்து “மே டே” எனக் கூச்சலிட்டு விமானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.   அண்மையில் புதுடெல்லியிலிருந்து இந்தூர் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இயந்திரங்களில் ஒன்று தீப்பற்றியது. தீப்பற்றியதை அறிந்த பின்னர் விமானம் மீண்டும்  டெல்லிக்கே திரும்பியது. இதனால் டெல்லி விமானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.  AI 2913 என்ற விமானம் டெல்லியிலிருந்து இந்தூருக்குப் புறப்பட்டபோது, வலது இயந்திரத்தில் தீ விபத்துக்கான எச்சரிக்கையை விமானக் குழுவினர் அவதானித்தனர். அதனை அடுத்து வழக்கமான நடைமுறைகளின்படி, விமானிகள் பாதிக்கப்பட்ட இயந்திரத்தை நிறுத்தி விமானத்தை டெல்லிக்குத் திருப்பினர்.விமானத்தை டெல்லிக்குத் திருப்பும் போதே விமானி வானில் இருந்து மே டே என்று கூச்சலிட்டு தீ விபத்திற்கான எச்சரிக்கையை விடுத்தார். அதன்பின்னர் விமானத்தை பாதுகாப்பாக விமானி  தரையிறக்கினார் என்று ஏர் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.அந்த அறிக்கையில், பயணிகள் இந்தூருக்குச் செல்லும் மற்றொரு சேவைக்கு மாற்றப்பட்டனர் என்றும் நடந்த அசெளகரியத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்தது. அத்துடன் விமானப் பயணிகள், பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு முதன்மை தருவதாகவும் ஏர் இநதியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement