• Sep 02 2025

மீண்டும் உச்சம் தொடும் தங்கத்தின் விலை; இரண்டே நாட்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

Chithra / Sep 2nd 2025, 12:32 pm
image

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நேற்று (01) தங்கம் பவுண் ஒன்றிற்கு 6000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் 2000 ரூபாயால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. 

கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர். 

கடந்த சனிக்கிழமை 274,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, நேற்று 280,000 ரூபாயாக அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. 

இந்த நிலையில் இன்று (02) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றிற்கு 2000 ரூபாயால் அதிகரித்து, 282,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. 

அந்தவகையில்,  22 கரட் தங்கம் பவுண் ஒன்று 260,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 35,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,600 ரூபாயாகவும்  விற்பனை செய்யப்படுகிறது.


மீண்டும் உச்சம் தொடும் தங்கத்தின் விலை; இரண்டே நாட்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நேற்று (01) தங்கம் பவுண் ஒன்றிற்கு 6000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் 2000 ரூபாயால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை 274,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, நேற்று 280,000 ரூபாயாக அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் இன்று (02) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றிற்கு 2000 ரூபாயால் அதிகரித்து, 282,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. அந்தவகையில்,  22 கரட் தங்கம் பவுண் ஒன்று 260,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 35,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,600 ரூபாயாகவும்  விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement