• Sep 03 2025

554 சிறை அதிகாரிகளை நியமிக்க அனுமதி

Chithra / Sep 3rd 2025, 8:55 am
image

சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 554 உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்கவின் இது குறித்து தெரிவிக்கையில், 

இந்த வெற்றிடங்கள் குறித்து ஆகஸ்ட் 29, 2025 அன்று அரச வர்த்தமானியில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

புதிய ஆட்சேர்ப்பில் 409 ஆண் சிறைக்காவலர்கள், 70 பெண் சிறைக்காவலர்கள், இரண்டாம் தர ஆண் சிறைச்சாலை அதிகாரிகளாக 55 பேர், இரண்டாம் தர பெண் சிறைச்சாலை அதிகாரிகளாக 7 பேர், இரண்டாம் தர ஆண் புனர்வாழ்வு அதிகாரிகளாக 10 பேர் மற்றும் இரண்டாம் தர பெண் புனர்வாழ்வு அதிகாரிகளாக 3 பேர் உள்வாங்கப்படவுள்ளனர்.

554 சிறை அதிகாரிகளை நியமிக்க அனுமதி சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 554 உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்கவின் இது குறித்து தெரிவிக்கையில், இந்த வெற்றிடங்கள் குறித்து ஆகஸ்ட் 29, 2025 அன்று அரச வர்த்தமானியில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.புதிய ஆட்சேர்ப்பில் 409 ஆண் சிறைக்காவலர்கள், 70 பெண் சிறைக்காவலர்கள், இரண்டாம் தர ஆண் சிறைச்சாலை அதிகாரிகளாக 55 பேர், இரண்டாம் தர பெண் சிறைச்சாலை அதிகாரிகளாக 7 பேர், இரண்டாம் தர ஆண் புனர்வாழ்வு அதிகாரிகளாக 10 பேர் மற்றும் இரண்டாம் தர பெண் புனர்வாழ்வு அதிகாரிகளாக 3 பேர் உள்வாங்கப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement