• Sep 03 2025

இன்று வெப்பநிலை 'எச்சரிக்கை' மட்டத்தில்! விழிப்புடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

Chithra / Sep 3rd 2025, 8:05 am
image

வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 

இன்றையதினம் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இப்பகுதிகளின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கிணங்க இன்று   நண்பகல் 12.09 அளவில் மாரவில, தம்பெலஸ்ஸ, மாவத்தகம, உக்குவெல மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (03) சிறிதளவான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   

இன்று வெப்பநிலை 'எச்சரிக்கை' மட்டத்தில் விழிப்புடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்றையதினம் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதிகளின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அதற்கிணங்க இன்று   நண்பகல் 12.09 அளவில் மாரவில, தம்பெலஸ்ஸ, மாவத்தகம, உக்குவெல மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (03) சிறிதளவான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement