• Nov 23 2024

மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு..!samugammedia

mathuri / Jan 7th 2024, 10:25 am
image

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ,மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகம்,மாவட்ட செயலகம் இணைந்து முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை (07) மன்னார் பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழல்களை அடையாளப்படுத்தி அவற்றை அப்புறப்படுத்துதல், அதே நேரம் நுளம்பு பெருக்கத்துக்கான சூழல் காணப்படும் வீடுகளின் உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள்,டெங்கு ஒழிப்பு செயலனி உத்தியோகஸ்தர்கள்,பாதுகாப்பு துறையினர் விசேட கள விஜய செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர். 

அதே நேரம் மன்னார் பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் டெங்கு பரவல் அதிகமாக உள்ள  பகுதிகளில் பொதுமக்களின் உதவியுடன் விசேட சிரமாதான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் இம் மாதம் முழுவதும்  டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒவ்வரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது


மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.samugammedia மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ,மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகம்,மாவட்ட செயலகம் இணைந்து முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை (07) மன்னார் பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழல்களை அடையாளப்படுத்தி அவற்றை அப்புறப்படுத்துதல், அதே நேரம் நுளம்பு பெருக்கத்துக்கான சூழல் காணப்படும் வீடுகளின் உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள்,டெங்கு ஒழிப்பு செயலனி உத்தியோகஸ்தர்கள்,பாதுகாப்பு துறையினர் விசேட கள விஜய செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர். அதே நேரம் மன்னார் பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் டெங்கு பரவல் அதிகமாக உள்ள  பகுதிகளில் பொதுமக்களின் உதவியுடன் விசேட சிரமாதான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் இம் மாதம் முழுவதும்  டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒவ்வரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது

Advertisement

Advertisement

Advertisement