டெங்கு நோயின் தாக்கத்தினால் மேல் மாகாணம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தையும் நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக பதிவாகியுள்ளது.இதற்கிடையில், டெங்கு தொடர்பாக பதிவாகியுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்று (10) நிலவரப்படி 46 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் கம்பஹா மாவட்டத்தில் 13,556 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 13,355 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 4,699 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4,425 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும், குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை டெங்கு நோய் தற்போது கடுமையாக பரவி வருவதால் அதிக அபாயமுள்ள பகுதிகளில் செயல்படும் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுமாறு சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டிய பின்னர் அல்லது பாதிப்பு மோசமடைந்த பின்னர் கல்வி நிறுவனங்களை மூடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனை விளக்கும்போது, “குதிரை தப்பிச் சென்ற பிறகு லாயத்தை மூடுவதால் பயனில்லை” என்ற முதுமொழியையும் அவர் மேற்கோள்காட்டினார்.
எனவே கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பல வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களை அனுமதிப்பதற்கான இடவசதி கடுமையாகப் பற்றாக்குறையாக உள்ளதாகவும், இதனால் நோயாளர்கள் கட்டில்களுக்கு அடியிலும் தாழ்வாரங்களிலும் சிகிச்சை பெறும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியால் சுகாதார ஊழியர்கள் கடும் பணிச்சுமையை எதிர்கொண்டு வருவதோடு, போதிய சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால் நோயாளிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் டெங்கு தீவிரம்; உயிராபத்து ஏற்படலாம் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை மூட கோரிக்கை டெங்கு நோயின் தாக்கத்தினால் மேல் மாகாணம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தையும் நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக பதிவாகியுள்ளது.இதற்கிடையில், டெங்கு தொடர்பாக பதிவாகியுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்று (10) நிலவரப்படி 46 ஆக உயர்ந்துள்ளது.இந்த ஆண்டில் கம்பஹா மாவட்டத்தில் 13,556 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 13,355 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 4,699 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4,425 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும், குறிப்பிட்டுள்ளது. இதேவேளை டெங்கு நோய் தற்போது கடுமையாக பரவி வருவதால் அதிக அபாயமுள்ள பகுதிகளில் செயல்படும் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுமாறு சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார். நோயாளர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டிய பின்னர் அல்லது பாதிப்பு மோசமடைந்த பின்னர் கல்வி நிறுவனங்களை மூடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.இதனை விளக்கும்போது, “குதிரை தப்பிச் சென்ற பிறகு லாயத்தை மூடுவதால் பயனில்லை” என்ற முதுமொழியையும் அவர் மேற்கோள்காட்டினார்.எனவே கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பல வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களை அனுமதிப்பதற்கான இடவசதி கடுமையாகப் பற்றாக்குறையாக உள்ளதாகவும், இதனால் நோயாளர்கள் கட்டில்களுக்கு அடியிலும் தாழ்வாரங்களிலும் சிகிச்சை பெறும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த நெருக்கடியால் சுகாதார ஊழியர்கள் கடும் பணிச்சுமையை எதிர்கொண்டு வருவதோடு, போதிய சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால் நோயாளிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.