நாளைய தினம் நிலவக்கூடும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
வடக்கு, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் "அதிக கவனம் செலுத்த வேண்டிய" மட்டத்தில் காணப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் "கவனம்" செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளைய வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை. நாளைய தினம் நிலவக்கூடும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.வடக்கு, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் "அதிக கவனம் செலுத்த வேண்டிய" மட்டத்தில் காணப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் "கவனம்" செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.