• Nov 24 2024

முன்னாள் எம்.பி.க்களுக்கு தபால் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு!

Chithra / Oct 8th 2024, 9:22 am
image

 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச முத்திரைகளை அருகில் உள்ள தபால் திணைக்களம் அல்லது பாராளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் அந்த முத்திரைகளைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதால், அவற்றை அருகிலுள்ள தபால் அலுவலகம் அல்லது பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்புமாறு தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் மா அதிபர், முத்திரைகளை செல்லாதவையாக கருதுமாறு நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வருடாந்தம் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான முத்திரைகள் இலவசமாக வழங்கப்படும், 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சகல வசதிகளும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.பி.க்களுக்கு தபால் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச முத்திரைகளை அருகில் உள்ள தபால் திணைக்களம் அல்லது பாராளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் அந்த முத்திரைகளைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதால், அவற்றை அருகிலுள்ள தபால் அலுவலகம் அல்லது பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்புமாறு தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.தபால் மா அதிபர், முத்திரைகளை செல்லாதவையாக கருதுமாறு நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வருடாந்தம் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான முத்திரைகள் இலவசமாக வழங்கப்படும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சகல வசதிகளும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement