• Mar 17 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுப்பு

Thansita / Mar 17th 2025, 7:46 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அரசியல் கட்சிகள்இ சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.நளீம் தலைமையில் ஏறாவூர் நகர்இ ஏறாவூர்ப்பற்று நகரசபைஇ பிரதேசசபைக்கான கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டது.

இதேபோன்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் தலைமையில் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் திலீப் தலைமையில் வாழைச்சேனைஇ கோறளைப்பற்று மத்திஇ வாகரை ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சர்வஜன பலய கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கான  கட்டுப் பணம் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் ஷாபி தலைமையில் செலுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அரசியல் கட்சிகள்இ சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.நளீம் தலைமையில் ஏறாவூர் நகர்இ ஏறாவூர்ப்பற்று நகரசபைஇ பிரதேசசபைக்கான கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டது.இதேபோன்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் தலைமையில் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் திலீப் தலைமையில் வாழைச்சேனைஇ கோறளைப்பற்று மத்திஇ வாகரை ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து சர்வஜன பலய கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கான  கட்டுப் பணம் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் ஷாபி தலைமையில் செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement