• Apr 13 2025

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Chithra / Apr 10th 2025, 8:05 am
image

  

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - மத்திய வங்கக் கடலில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.

மேலும், குறித்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக (மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில்) பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு அவதானம் செலுத்துமாறு கடற்தொழிலாளர் மற்றும் கடல்சார் சமூகத்திடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை   மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - மத்திய வங்கக் கடலில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.மேலும், குறித்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக (மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில்) பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு அவதானம் செலுத்துமாறு கடற்தொழிலாளர் மற்றும் கடல்சார் சமூகத்திடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement