• Mar 05 2026

யாழில் பனை அபிவிருத்தி சபைகளுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் விஜயம்!

shanu / Feb 10th 2026, 10:09 am
image

பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தின் பனை மற்றும் பனை  சார் உற்பத்தி கைத்தொழிலில் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காக  பிரதி அமைச்சர் சுந்தரிலங்கம் பிரதீப் யாழ்பபாணத்திற்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.


துறை சார் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் கைத்தொழிலாளர்களை சந்திப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். 


யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள பனை கூட்டுறவு சங்கங்களின் காரியாலயங்களுக்கு கைத்தொழில் நிலையங்களுக்கு நேற்றைய தினம் (09.02.2026) நேரில் சென்று உற்பத்தியாளர்கள் மற்றும் கைத்தொழிலில் ஈடுபட்டிருப்போரின் கருத்துக்களை கேட்டறிந்தார். 


பின்னர்  குறித்த துறையினை மென்மேலும் விருத்தி செய்ய மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வைத்தார்.


இச்சந்தர்ப்பத்தின் போது வடக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா மற்றும் வட மாகாண கூட்டுறவு சங்க ஊழியர் ஆணைக்குழுவின் புதிய தலைவர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழில் பனை அபிவிருத்தி சபைகளுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் விஜயம் பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தின் பனை மற்றும் பனை  சார் உற்பத்தி கைத்தொழிலில் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காக  பிரதி அமைச்சர் சுந்தரிலங்கம் பிரதீப் யாழ்பபாணத்திற்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.துறை சார் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் கைத்தொழிலாளர்களை சந்திப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள பனை கூட்டுறவு சங்கங்களின் காரியாலயங்களுக்கு கைத்தொழில் நிலையங்களுக்கு நேற்றைய தினம் (09.02.2026) நேரில் சென்று உற்பத்தியாளர்கள் மற்றும் கைத்தொழிலில் ஈடுபட்டிருப்போரின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர்  குறித்த துறையினை மென்மேலும் விருத்தி செய்ய மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வைத்தார்.இச்சந்தர்ப்பத்தின் போது வடக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா மற்றும் வட மாகாண கூட்டுறவு சங்க ஊழியர் ஆணைக்குழுவின் புதிய தலைவர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement